வெற்றி கொண்டாட்டத்தில் டான் படக்குழு!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சில தினங்களுக்கு முன்னர் வெளியான படம் டான் .இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கி உள்ளார் . S.J.சூர்யா இந்த படத்தில் வில்லனாக நடித்து இருக்கிறார் . நடிகர் சமுத்திரக்கனி சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடித்துள்ளார் .பிரியங்கா அருள் மோகன் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார் . அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்து இருந்தது .

இந்நிலையில் படம் திரை அரங்கில் மே 13-ஆம் தேதி வெளியானது . படம் வெளியான முதல் அனைத்து தரப்பு ரசிகர்களும் இந்த படத்தை பாராட்டி உள்ளனர் . பொதுவான ரசிகர்களும் , சினிமா ரசிகர்களும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர் .

லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் உலகம் முழுவதும் நல்ல வசூலை பெற்று வருகிறது . இதனை தொடர்ந்து டான் படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர் . அந்த கொண்டாட்டத்தில் எடுத்த புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது .

Share.