லெட், மண்டேலா, திரௌபதி உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து சிறந்த நடிகை என்று பெயர் வாங்கியவர் நடிகை ஷீலா ராஜ்குமார் . இந்நிலையில் நடிகை ஷீலா ராஜ்குமார் நடிக்கும் அடுத்த படங்கள் மட்டும் வெப் சீரிஸ் பற்றின தகவல் வெளியாகி இருக்கிறது .
இயக்குனர் “வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகிவரும் பேட்ட காளி என்கிற வெப் சீரிஸில் ஷீலா ராஜ்குமார் நடித்து வருகிறார் . அண்ணனுக்கு ஜே படத்தை இயக்கிய ராஜ்குமார் இந்த வெப்சீரிஸை இயக்குகிறார்.மேற்கு தொடர்ச்சி மலை ஆண்டனி இதில் ஹீரோவாக நடித்திருக்கிறார். கலையரசன், கிஷோர், வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜல்லிக்கட்டை மையப்படுத்தி தயாராகும் இந்த வெப் சீரிஸ், வேல்ராஜ் ஒளிப்பதிவு, சந்தோஷ் நாராயணன் இசை என திரைப் படத்திற்கு இணையாக இந்த வெப் சீரிஸ் உருவாகி உள்ளது. பேட்ட காளி என்கிற ஜல்லிக்கட்டு காளையை வளர்க்கும் பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது .
மேலும் கோலிசோடா உள்ளிட்ட படங்களுக்கு படத்தொகுப்பு செய்த எடிட்டர் ராஜா சேதுபதி அவரின் முதல் தயாரிப்பில் ஜோதி என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் .8 தோட்டாக்கள் ஹீரோ வெற்றி இதில் கதாநாயகனாக நடித்துள்ளார் க்ரிஷா குரூப், ராட்சசன் சரவணன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கிருஷ்ணா அண்ணாமலை இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்த சமூகத்தில் பெண்களுக்கு எதிராக இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கும் குடும்ப வன்முறை மற்றும் குழந்தைகள் கடத்தலை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது. மேலும் இரண்டு தமிழ் படங்களில் நடிக்க உள்ளதாகவும் அதனை பற்றின அறிவிப்புகள் விரைவில் வரும் என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது .