விஜய் சேதுபதிக்கு திரௌபதி இயக்குனர் பதில் கேள்வி…!

  • May 6, 2020 / 10:47 AM IST

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். தற்போதைய சூழ்நிலையில் அதிக படங்களை கைவசம் வைத்துள்ள நடிகராகவும் சமூக அவலங்களை தட்டி கேட்கும் நபராகவும் விஜய் சேதுபதி திகழ்ந்து வருகிறார். விஜய் சேதுபதி ஹீரோவாக மட்டுமின்றி, வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். சினிமாவிலும் பிஸியான நடிகராக அவர் உருவெடுத்திருக்கிறார். சில தெலுங்கு படங்களிலும் வில்லனாக நடித்து வருகிறார்.

சில நேரங்களில் மதம், அரசியல் இப்படி எதாவது ஒன்றை பேசி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது அவரின் ஸ்டைல்.. அப்படித்தான் நேற்று நடிகர் விஜய் சேதுபதி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். அதில் பசி என்றொரு நோய் இருக்கு… அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும்… ஓ மை கடவுளே! என குறிப்பிட்டிருந்தார்.

இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு ஆதரவாக கமெண்டுகளை பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் அவரது பதிவை பார்த்த இயக்குநரான மோகன் ஜி, விஜய் சேதுபதிக்கு பதில் கேள்வி கேட்டுள்ளார். மோகன் செய்துள்ள ட்வீட்டில் “பசி எடுக்கலனா இந்த உலகம் எப்படி இயங்கும்.. பசி தான் உங்களை உழைக்க சொல்லும், பசி தான் அடுத்தவர் மீது கருணையை உருவாக்கும், பசியை அழிக்கும் நாள் முதல் உலகம் அழிய தொடங்கும் நண்பா..” என தெரிவித்துள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus