டப்பிங் வேலைகளில் இறங்கி உள்ள “மகா” திரைப்படக் குழு!

  • December 15, 2020 / 01:42 PM IST

2003 ஆம் ஆண்டு “ஹவா” என்ற இந்தி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் 2007 ஆம் ஆண்டு “தேசமுதுரு” என்ற தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோயினாக உருவெடுத்தார். பின் 2011ம் ஆண்டு வெளியான “மாப்பிள்ளை” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்தார்.

இந்தப் படத்தை தொடர்ந்து எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, வேலாயுதம், சேட்டை, தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம்-2, பிரியாணி, அரண்மனை, ரோமியோ ஜூலியட், வாலு, மனிதன், போகன் போன்ற வெற்றிப்படங்களில் தமிழின் முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார் ஹன்சிகா மோத்வானி.

இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் “மகா”. யூ.ஆர்.ஜமீல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தற்போது இவர் இந்த படத்தின் டப்பிங் வேலைகளில் இறங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டுள்ளார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus