2006ம் ஆண்டு ஒரு மலையாள படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி 2007ஆம் ஆண்டு “சிருங்காரம்” என்ற தமிழ் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதாரி.
இந்த படத்தை தொடர்ந்து பல ஹிந்தி படங்களிலும் மராத்தி படங்களிலும் நடித்து வந்த அதிதி ராவ் ஹைதாரி, 2017 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான “காற்று வெளியிடை” திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் தமிழ் திரையுலகில் கால்பதித்தார்.
இந்த படத்தை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு “செக்கச் சிவந்த வானம்” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் மிஷ்கின் இயக்கத்தில் “சைக்கோ” என்ற படத்தில் கடைசியாக நடித்திருந்த இவர், தற்போது தமிழில் “ஹே சினாமிகா” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் தன் பிறந்தநாளை கொண்டாடிய அதிதி ராவ் ஹைதாரிக்கு பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் இவர்களிருவரும் ‘ஹே சினாமிகா’ படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் பொழுது அதிதி ராவ் ஹைதாரி அழுதது போன்று இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.