மலையாள திரையுலகில் முன்னணியில் இருக்கும் நடிகர்களில் ஒருவரான துல்கர் சல்மான் தமிழிலும் “வாயை மூடி பேசவும்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார்.
இந்த படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் “ஓ காதல் கண்மணி” என்ற படத்தில் நடித்திருந்தார். பின் சோலோ, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற படங்களின் மூலம் ரசிகர் கூட்டத்தை பெற்றார்.
தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று மூன்று மொழிகளில் உருவாக உள்ள படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என்றும்,
இவருக்கு ஜோடியாக இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் பூஜா ஹெட்ஜ் நடிக்க உள்ளதாகவும் தற்போது தகவல் வந்துள்ளது.