மலையாள சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் துல்கர் சல்மான். இவர் நடித்த புதிய கேங்ஸ்டர் படமான ‘கிங் ஆஃப் கோதா’ கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி மலையாளம் மொழி மட்டுமின்றி தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் திரையரங்குகளில் ரிலீஸானது.
இந்த படத்தை இயக்குநர் அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ளார். இதில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ஷபீர், பிரசன்னா, நைலா உஷா, செம்பன் வினோத், கோகுல் சுரேஷ், சம்மி திலகன், ஷாந்தி கிருஷ்ணா, அனிகா சுரேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இதற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார், நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார், ஷியாம் சசிதரன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 5 நாட்களில் இந்த படம் உலக அளவில் ரூ.30 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.