துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ டிஜிட்டல் ரைட்ஸை இத்தனை கோடிக்கு கைப்பற்றியதா பிரபல OTT நிறுவனம்?

  • July 8, 2023 / 12:15 PM IST

மலையாள சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் துல்கர் சல்மான். இவர் நடிப்பில் உருவாகி வரும் புதிய கேங்ஸ்டர் படம் ‘கிங் ஆஃப் கோதா’. இந்த படத்தை இயக்குநர் அபிலாஷ் ஜோஷி இயக்கி வருகிறார்.

இதில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ஷபீர், பிரசன்னா, நைலா உஷா, செம்பன் வினோத், கோகுல் சுரேஷ், சம்மி திலகன், ஷாந்தி கிருஷ்ணா, அனிகா சுரேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்து வருகிறார், நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார், ஷியாம் சசிதரன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். சமீபத்தில், வெளியான இதன் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது.

படத்தை மலையாளம் மொழி மட்டுமின்றி தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் வருகிற ஆகஸ்ட் மாதம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் டிஜிட்டல் ரைட்ஸை பிரபல OTT நிறுவனம் ரூ.55 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus