துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

  • August 23, 2023 / 05:03 PM IST

மலையாள சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் துல்கர் சல்மான். இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய கேங்ஸ்டர் படம் ‘கிங் ஆஃப் கோதா’. இந்த படத்தை இயக்குநர் அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ளார்.

இதில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ஷபீர், பிரசன்னா, நைலா உஷா, செம்பன் வினோத், கோகுல் சுரேஷ், சம்மி திலகன், ஷாந்தி கிருஷ்ணா, அனிகா சுரேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார், நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார், ஷியாம் சசிதரன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். சமீபத்தில், வெளியான இதன் டீசர், ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது.

படத்தை நாளை (ஆகஸ்ட் 24-ஆம் தேதி) மலையாளம் மொழி மட்டுமின்றி தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இந்த படத்தை பார்த்து ரசித்த வெளிநாட்டு விநியோகஸ்தர் ஒருவர் ட்விட்டரில் பாராட்டி ஸ்டேட்டஸ் போட்டுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus