துல்கர் சல்மான் கேங்ஸ்டராக நடித்துள்ள ‘கிங் ஆஃப் கோதா’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • August 24, 2023 / 11:05 AM IST

மலையாள சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் துல்கர் சல்மான். இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய கேங்ஸ்டர் படமான ‘கிங் ஆஃப் கோதா’ இன்று (ஆகஸ்ட் 24-ஆம் தேதி) மலையாளம் மொழி மட்டுமின்றி தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.

இந்த படத்தை இயக்குநர் அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ளார். இதில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ஷபீர், பிரசன்னா, நைலா உஷா, செம்பன் வினோத், கோகுல் சுரேஷ், சம்மி திலகன், ஷாந்தி கிருஷ்ணா, அனிகா சுரேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார், நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார், ஷியாம் சசிதரன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus