துல்கர் சல்மான் நடிக்கும் கேங்ஸ்டர் படமான ‘கிங் ஆஃப் கோதா’… எதிர்பார்ப்பை எகிற வைத்த டீசர்!

  • June 28, 2023 / 07:32 PM IST

மலையாள சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் துல்கர் சல்மான். இவர் நடிப்பில் உருவாகி வரும் புதிய கேங்ஸ்டர் படம் ‘கிங் ஆஃப் கோதா’. இந்த படத்தை இயக்குநர் அபிலாஷ் ஜோஷி இயக்கி வருகிறார்.

இதில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ஷபீர், பிரசன்னா, நைலா உஷா, செம்பன் வினோத், கோகுல் சுரேஷ், சம்மி திலகன், ஷாந்தி கிருஷ்ணா, அனிகா சுரேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்து வருகிறார், நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார், ஷியாம் சசிதரன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இன்று இதன் டீசரை துல்கர் சல்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்துள்ளார்.

இந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. படத்தை மலையாளம் மொழி மட்டுமின்றி தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் வருகிற ஆகஸ்ட் மாதம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus