மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் துல்கர் சல்மான். இவர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘லக்கி பாஸ்கர்’. இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார்.
இதில் ஹீரோயினாக மீனாக்ஷி சவுத்ரி நடிக்கிறார். இதனை ‘சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் – ஃபார்ச்சியூன் ஃபோர் சினிமாஸ் – ஸ்ரீகரா ஸ்டுடியோஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது. இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி என 4 மொழிகளில் ரிலீஸாகுமாம்.