தமிழ் , மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரபலமான நடிகராக இருப்பவர் துல்கர் சல்மான் . இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் சீதா – ராமம் . தொடர்ந்து பல வித்தியாசமான கதாபாத்திரங்ளை தேர்வு செய்து நடித்து ரசிகர்களை அசத்தி வருகிறார் துல்கர் சல்மான் .
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் துல்கர் சல்மான் பேசிய “நான் எல்லாவிதமான கதாபாத்திரத்திலும் நடிக்க விரும்புகிறேன். நான் சென்னையில்தான் படித்தேன்.. வளர்ந்தேன். சத்யம் தியேட்டர், பெசன்ட் நகர் பீச்.. இப்படி சென்னை நகரின் அனைத்து பகுதிகளும் எனக்கு நன்றாக தெரியும். இவை அந்தக் காலத்தில் எப்படி இருந்திருக்கும் என அடிக்கடி யோசிப்பேன். அதே போல பீரியட் படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை அதிகமாக இருக்கிறது.
ஒருவேளை நான் இருபது வருடங்களுக்கு முன்பாக.. 1960ல் பிறந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ” என்று கூறி உள்ளார் . துல்கர் சல்மான் தற்போது king of kotha என்கிற படத்தில் படுத்து வருகிறார் .