வைரலாகும் டம்மி சோழர்கள் !

  • September 30, 2022 / 10:38 AM IST

இந்திய சினிமாவின் முக்கியமான தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் செக்க சிவந்த வானம் . இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம்
பொன்னியின் செல்வன் படத்தை இயக்க போவதாக அறிவித்தார் . கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற நாவலை தழுவி இந்த படம் உருவாகியுள்ளது .

இந்த படத்தில் விக்ரம் ,கார்த்தி ,ஜெயம் ரவி , ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா என பல சினிமா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் . படத்திற்கு A.R.ரகுமான் இசையமைத்து உள்ளார் . தமிழ் ரசிகர்கள் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது .


இந்நிலையில் பொன்னியின் செல்வன் படக்குழு படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னை , கேரளா ,கர்நாடகா , மும்பை டெல்லி என்று அடுத்து அடுத்து தொடர் பயணங்கள் செய்து வந்தனர் . பொன்னியின் செல்வன் முதல் பாகம் நாளை ( செப்டம்பர் 30 ) வெளியாக உள்ளது .

இந்நிலையில் பொன்னியின் செல்வன் போஸ்டரை எடிட் செய்து புதிய போஸ்டர் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது . அதில் நடிகர் சிவகார்த்திகேயன் , ப்ரியங்கா மோகன் , இயக்குனர் கவுதம் , குக் வித் கோமாளி புகழ் , ஷிவாங்கி ,ஆகியோரின் புகைப்படங்களை இடம் பெற்று உள்ளது . இதை பார்த்த நெட்டிசன்கள் பலர் அந்த போஸ்டரை வறுத்து எடுத்துக்கொண்டு இருக்கின்றனர் .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus