விஜயகாந்த் படங்களின் ஆஸ்தான எடிட்டர் மறைந்தார்!

  • June 25, 2020 / 10:35 PM IST

“ஸ்கோப் எடிட்டர்” என்று திரைத்துறையினரால் அழைக்கப்படும் பிரபல எடிட்டர் ஜெயச்சந்திரன் இன்று மாரடைப்பால் காலமானார்.‌ இவர் பிரபல நடிகர் விஜயகாந்தின் ஆஸ்தான எடிட்டர் என்று கருதப்பட்டவர்.

1986 இல் வெளிவந்த ஊமைவிழிகள் படத்தை திரைப்பட கல்லூரி மாணவர்கள் உருவாக்கினர். இந்தப்படத்தை ஆபாவாணன் தயாரித்தார். இந்தப் படத்தில் எடிட்டராக அறிமுகமானவர் ஜி. ஜெயச்சந்திரன்.

இவர் பழம்பெரும் எடிட்டர் வி.கோவிந்தசாமியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் சினிமாஸ்கோப் தொழில்நுட்பம் வெளியாகி,வெளிவந்த முதல் திரைப்படம் ஊமைவிழிகள். அதைத்தொடர்ந்து இவரது பல படங்கள் சினிமாஸ்கோப்பில் தயாரானது. இதனால் சினிமாவில் இவரை ஸ்கோப் எடிட்டர் என்று புகழ்ந்தார்கள்.

இவர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில், நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் போன்ற படங்களுக்கு எடிட்டராக பணியாற்றி புகழ்பெற்றார்.

இவர் 150 படங்களுக்கு மேல் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். விஜய்காந்த் படத்தை தயாரித்த ஒரே எடிட்டர் இவர்தான்.

மனித தர்மம், தங்கபாப்பா ஆகிய படங்களை அவர் தயாரித்திருக்கிறார். பரதன், தாய்நாடு, மாநகரகாவல், அரவிந்தன், அன்புச் சங்கிலி ஆகிய வெற்றிப் படங்களில் பணிபுரிந்தார். தனக்கென தனி விருவிருப்பான எடிட்டிங் முறையை பின்பற்றும் இவரின் இழப்பு சினிமாவிற்கு பேரிழப்பாகும்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus