வெளியாக உள்ள “ஈஸ்வரன்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல்!
December 11, 2020 / 09:16 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ‘ஈஸ்வரன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக தனது உடல் எடையை வெகுவாக குறைத்த இவரின் புது லுக், அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியது மட்டுமில்லாமல், பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
பழைய சிம்பு திரும்பி விட்டார் என்று இவரது ரசிகர்கள் சிம்புவின் புது லுக்கை இணையதளத்தில் வைரலாகி வருகிறார்கள். இந்நிலையில் அவ்வப்போது இந்த படப்பிடிப்பு தளத்திலிருந்து அப்டேட் வந்த வண்ணம் இருந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து விட்டது.
இந்த படத்தின் டப்பிங் வேலைகளும் முடிந்து விட்டதாக நடிகர் சிலம்பரசன் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். வேகமாக முடிவடையும் இந்த படத்தின் வேலைகளால் சிம்பு ரசிகர்கள் இந்த படத்தின் வெளியீட்டுக்காக ஆவலாக காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் தற்போது நடிகர் சிலம்பரசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வருகிற டிசம்பர் 14ஆம் தேதி இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என்று அதிகாரபூர்வமான தகவலை வெளியிட்டுள்ளார்.