வெளியாகவுள்ள ‘ஈஸ்வரன்’ திரைப்படத்தின் டீசர்!

  • November 13, 2020 / 10:30 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ‘ஈஸ்வரன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக தனது உடல் எடையை வெகுவாக குறைத்த இவரின் புது லுக், அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியது மட்டுமில்லாமல், பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

பழைய சிம்பு திரும்பி விட்டார் என்று இவரது ரசிகர்கள் சிம்புவின் புது லுக்கை இணையதளத்தில் வைரலாகி வருகிறார்கள். இந்நிலையில் அவ்வப்போது இந்த படப்பிடிப்பு தளத்திலிருந்து அப்டேட் வந்த வண்ணம் உள்ளது.

ஏற்கனவே நடிகர் சிலம்பரசன் இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்றுள்ளதாகவும், வருகிற தீபாவளியன்று இந்தப் படத்தின் டீசர் வெளியாகும் என்று கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து தற்போது நாளை 4:32 மணிக்கு இந்த படத்தின் டீஸர் வெளியாகும் என்று தற்போது அதிகாரபூர்வமான தகவல் வெளியாகி உள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus