சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் ஜெயப்பிரதா. இவர் தமிழில் ‘மன்மத லீலை, நினைத்தாலே இனிக்கும், 47 நாட்கள், ஏழை ஜாதி, தசாவதாரம்’ ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
ஜெயப்பிரதா தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், பெங்காலி ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இவர் கடைசியாக தமிழில் நடித்த ‘கேணி’ திரைப்படம் 2016-ஆம் ஆண்டு வெளியானது.
ஜெயப்பிரதா நடத்தி வரும் தியேட்டரில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ESI தொகையை அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என தொழிலாளர்கள் புகார் கொடுத்திருந்தனர்.
இது தொடர்பாக ஜெயப்பிரதா மீது தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்நிலையில், இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளனர் என தகவல் கிடைத்துள்ளது.