தமிழ் திரையுலகில் ‘ஒரு பக்க கதை’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை மேகா ஆகாஷ். இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்கியிருந்த இந்த படத்தில் கதையின் நாயகனாக பிரபல நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் நடித்திருந்தார். இந்த படம் முடிக்கப்பட்டு பல வருடங்களாக ரிலீஸாகாமல் இருந்தது. பின், 2020-ஆம் ஆண்டு தான் OTT-யில் ரிலீஸானது.
2017-ஆம் ஆண்டு தெலுங்கில் வந்த ‘லை’ என்ற படம் தான் ரிலீஸான வகையில் மேகா ஆகாஷுக்கு முதல் படம். அதன் பிறகு தமிழில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ‘பேட்ட’, சிலம்பரசனின் ‘வந்தா ராஜாவா தான் வருவேன், அதர்வாவின் ‘பூமராங்’, மிர்ச்சி சிவாவின் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’, விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ ஆகிய படங்களில் நடித்தார்.
மேகா ஆகாஷ் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்கள் மட்டுமில்லாமல் ஹிந்தியிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது மேகா ஆகாஷ் நடிப்பில் தமிழில் ஒரு படமும், தெலுங்கில் இரண்டு படங்களும் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், நடிகை மேகா ஆகாஷ் தமிழக அரசியல்வாதியின் மகனை விரைவில் திருமணம் செய்யப்போவதாக தகவல் கிடைத்துள்ளது.