‘எங்கேயும் எப்போதும்’ புகழ் ஷர்வானந்த் – ரக்ஷிதாவின் திருமண புகைப்படங்கள் & வீடியோஸ்!
June 5, 2023 / 10:56 AM IST
|Follow Us
தெலுங்கு சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஷர்வானந்த். இவர் தமிழ் மொழியில் ‘எங்கேயும் எப்போதும், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.
ஷர்வானந்த் நடித்து கடந்த ஆண்டு (2022) ரிலீஸான தமிழ் படம் ‘கணம்’. இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் இயக்கியிருந்தார். இதில் ஷர்வானந்துக்கு ஜோடியாக ரித்து வர்மா நடித்திருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் அமலா, சதீஷ், ரமேஷ் திலக், நாசர், ரவி ராகவேந்திரா, எம்.எஸ்.பாஸ்கர், வையாபுரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
இப்படம் சூப்பர் ஹிட்டானது. சமீபத்தில், ஷர்வானந்த் ரக்ஷிதா என்பவரை திருமணம் செய்துகொள்ளப்போவதாக குறிப்பிட்டு, அவரின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. தற்போது, ஷர்வானந்த் – ரக்ஷிதாவின் திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள லீலா பேலஸில் நடைபெற்றதாக தகவல் கிடைத்துள்ளது.