“நாய் சேகர் ரிட்டன்ஸ்” படத்திலிருந்து வெளியான பணக்காரன் பாடல் !

  • November 27, 2022 / 10:45 AM IST

தமிழில் மிகப் பிரமாண்ட படைப்புகளை வழங்கி வரும் லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், இயக்குனர் சுராஜ் இயக்கத்தில், நீண்ட இடைவேளைக்கு பிறகு வைகைப்புயல் வடிவேலு நாயகனாக நடித்து வரும், “நாய் சேகர் ரிட்டன்ஸ்” படம் டிசம்பர் மாதம் 9 -ஆம் தேதி வெளியாக உள்ளது .

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத காமெடி கூட்டணியை தந்த, நடிகர் இயக்குநர் பிரபுதேவாவும், வைகைப்புயல் வடிவேலுவும் இப்படத்தில் ஒரு பாடலில் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.

தமிழ் மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்தவர் வைகைப்புயல் வடிவேலு, அவரது காமெடி இல்லாத வீட்டு திரையே தமிழ்நாட்டில் கிடையாது. இணைய உலகமே அவரது காமெடியில் தான் இயங்கி வருகிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு அவர் நாயகனாக நடிக்கும் , “நாய் சேகர் ரிட்டன்ஸ்” படத்தின் அறிவிப்பு வெளியான போதே படத்திற்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியது. படத்தின் டைட்டிலோடு வெளியான மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நாய் சேகர் படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது தற்போது நாய் சேகர் படத்தின் இரண்டாவது பாடல் தற்போது வெளியாகி உள்ளது பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள இந்த பாடலை சந்தோஷ் நாராயணன் இசையமைத்து பாடியுள்ளார் . தற்போது இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

Read Today's Latest Videos Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus