மாற்றி மாற்றி அஸிமுடன் மோதும் போட்டியாளர்கள் !

  • December 1, 2022 / 08:08 PM IST

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இதுவரை 5 சீசன் நடந்து முடிந்துள்ளது . இந்நிலையில் பிக்பாஸ் 6-வது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்த வார கேப்டனாக அசீம் செயல்பட்டு வருகிறார் . மேலும் இந்த வாரம் ஏலியன் மற்றும் காட்டில் வசிக்கும் மக்கள் இடையே நடக்கும் போட்டி நடந்து வருகிறது . அசீம் கேப்டன் ஆன பிறகு வீட்டில் பல மாற்றங்களை செய்து வருகிறார் . குறிப்பாக சமைக்கும் அணியில் வாரம் வாரம் இருந்த நபர்களை மாற்றி உள்ளார் .

இந்நிலையில் பிக் பாஸ் 6 இன்று வெளியாகி உள்ள இரண்டாவது ப்ரோமோ சற்று விறுவிறுப்பை கூட்டி உள்ளது என்று தான் கூறவேண்டும் அஸிமுடன் அமுதவாணனுக்கு பிரச்சனை ஏற்பட்டது . இதனால் போட்டியாளர் ஆஸிம் மீது மற்ற போட்டியாளர்கள் கோபத்தில் உள்ளனர் . மைனா அஸிமிடம் இன்னொருவர் மீது எப்படி கை வைக்கிறாய் என்று கோபத்துடன் கேக்கிறார் . இதனால் இன்று நடக்க உள்ள எபிசொட் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் இருக்கின்றனர் .

Read Today's Latest Ott Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus