தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஸ்ணு விஷால் இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவர் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் இணையதளத்தில் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
இவர் 2009 ஆம் ஆண்டு சுசிந்திரன் இயக்கத்தில் வெளியான “வெண்ணிலா கபடி குழு” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.
இதைத்தொடர்ந்து குள்ளநரிக்கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, நேற்று இன்று நாளை, ராட்சசன், சிலுக்குவார் பட்டி சிங்கம் ஆகிய படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கிறார்.
2016 ஆம் ஆண்டு வெளியான “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் உருவெடுத்தார்.
கிரிக்கெட்டர்ராக தனது வாழ்க்கையை தொடங்கி இன்று சினிமா பிரபலமாக மாறி இருக்கும் விஷ்ணு விஷாலின் பிறந்தநாளையொட்டி அவர் அடுத்து நடித்து வெளிவரவிருக்கும் “F.I.R”திரைப்படக் குழு புரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த படத்தில் விஷ்ணு விஷால் இர்பான் அகமது என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில் இர்பான் அகமது கதாபாத்திரத்தை பற்றி விளக்கியுள்ளார்கள்.
இர்பான் அகமது ஐஐடி மெட்ராஸில் கெமிக்கல் இன்ஜினியரிங் முடித்த ஒரு பட்டதாரி. எதிர்பாராதவிதமாக ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். மலையாள நடிகை மாலா பார்வதி இந்த படத்தில் இவருக்கு தாயாக நடித்துள்ளார்.
மனு ஆனந்த் இயக்கத்தில் இந்த படத்திற்கு அஸ்வத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விஷ்ணு விஷாலுடன் மஞ்சிமா மோகன், ரைசா ஆகியோர் நடித்துள்ளார்கள். மேலும் கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. லாக்டவுன் முடிந்ததும் இந்த படம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.