ஃபஹத் ஃபாசிலின் பிறந்த நாள் கொண்டாட்டம்… வைரலாகும் நஸ்ரியாவுடனான ஸ்டில்ஸ்!

மலையாள சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஃபஹத் ஃபாசில். இவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஃபஹத் ஃபாசில் தமிழ் மொழியில் சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’, விஜய் சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’ ஆகிய படங்களில் நடித்திருந்தார்..

சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான தமிழ் படம் ‘விக்ரம்’. இதில் ஹீரோவாக ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடிக்க, இதனை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

இந்த படத்தில் ஃபஹத் ஃபாசில் ‘அமர்’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இப்போது உதயநிதி ஸ்டாலினின் ‘மாமன்னன்’ படத்தில் மிக முக்கிய ரோலில் ஃபஹத் ஃபாசில் நடித்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 8-ஆம் தேதி) ஃபஹத் ஃபாசிலின் பிறந்த நாள் என்பதால் ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது, ஃபஹத் ஃபாசிலின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுத்த ஸ்டில்ஸை இவரின் மனைவியும், பிரபல நடிகையுமான நஸ்ரியா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

Share.