மொரோக்கோவுக்கு தனது மனைவி நஸ்ரியாவுடன் சுற்றுலா சென்ற ஃபஹத் ஃபாசில்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

  • February 2, 2023 / 11:34 AM IST

மலையாள சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஃபஹத் ஃபாசில். இவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஃபஹத் ஃபாசில் தமிழ் மொழியில் சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’, விஜய் சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’ ஆகிய படங்களில் நடித்திருந்தார்..

கடந்த ஆண்டு (2022) இவர் நடிப்பில் வெளியான தமிழ் படம் ‘விக்ரம்’. இதில் ஹீரோவாக ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடிக்க, இதனை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

இந்த படத்தில் ஃபஹத் ஃபாசில் ‘அமர்’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இப்போது உதயநிதி ஸ்டாலினின் ‘மாமன்னன்’ படத்தில் மிக முக்கிய ரோலில் ஃபஹத் ஃபாசில் நடித்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், ஃபஹத் ஃபாசில் தனது மனைவியும், பிரபல நடிகையுமான நஸ்ரியாவுடன் மொரோக்கோவுக்கு சுற்றுலா சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு எடுத்த ஸ்டில்ஸை நஸ்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Read Today's Latest Gallery Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus