‘சூப்பர் டீலக்ஸ்’ படத்துக்காக ஃபஹத் ஃபாசில் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

  • December 14, 2022 / 12:02 AM IST

மலையாள சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஃபஹத் ஃபாசில். இவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஃபஹத் ஃபாசில் தமிழ் மொழியில் சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’, விஜய் சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘உலக நாயகன்’ கமல் ஹாசனின் ‘விக்ரம்’ ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

இதில் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான தியாகராஜன் குமாரராஜா இயக்கியிருந்தார். இந்த படத்தில் ஃபஹத் ஃபாசில் ‘முகில்’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் விஜய் சேதுபதி, காயத்ரி, மிஷ்கின், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்திருந்தனர். தற்போது, நடிகர் ஃபஹத் ஃபாசில் ‘சூப்பர் டீலக்ஸ்’-க்காக ரூ.75 லட்சம் சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus