முகநூலில் தான் கணக்கு வைத்து இல்லை எனவும், தனது பெயரில் உள்ளது போலி கணக்கு எனவும் நடிகை பவானா தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தனது பெயரில் ஒரு பேஸ்புக் கணக்கைக் ஒன்றை கண்டுபிடித்த நடிகை பவானா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இதுகுறித்து பகிர்ந்துள்ளார். அதில், முகநூலில் இருப்பது தனது கணக்கு இல்லை. அதை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என எச்சரித்த அவர்,பேஸ்புக்கில் இல்லை என்றார்.இதுகிறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில்,”ஹாய் நான் பேஸ்புக்கில் இல்லை! இது என் பெயரில் உள்ள ஒரு போலி பக்கம். இதுகுறித்து ஸ்வைப் செய்து இந்த பக்கத்தை புகாரளிக்கவும்” என்று பதிவிட்டுள்ளார்.
பிருத்விராஜ் நடித்த ‘ஆடம் ஜான்’ படத்தில் கடைசியாக நடித்த பாவனா,கன்னடத்தில் ’96 ‘ ரீமேக்கிலும் நடித்துள்ளார். 96 கன்னடா ரீமேக்கில் இவர் தான் ஜானு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.