இந்த லாக்டவுனில் இணையதளங்களில் ஏதாவது ஒரு பரபரப்பான செய்தி சினிமா பிரபலங்களை பற்றி வந்த வண்ணமே உள்ளது. சமீபத்தில் பாடகி ஜானகி இறந்துவிட்டதாக வதந்திகள் பரவியது. இதை தொடர்ந்து விஜய் வீட்டிற்கு போலி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சாலிகிராமத்தில் உள்ள விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக ஒரு மர்ம நபர் போலீஸ் கண்ட்ரோல் ரூம்மிற்கு கால் செய்து கூறியுள்ளார். ஆனால் விஜய் ஈசிஆரில் உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்துடன் குடியேறிவிட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இந்நிலையில் அவசரஅவசரமாக போலீசார் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று வெடிகுண்டு சோதனை மேற்கொண்டார்கள்.பல மணி நேர சோதனைக்குப் பின் ஏதும் கிடைக்கப் பெறாத நிலையில் இது வெறும் போலி மிரட்டல் என்பது போலீசாருக்கு தெரியவந்தது.
பின்பு யார் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்கள் என்பதை விசாரணை செய்த போலீசாருக்கு, விழுப்புரத்தில் உள்ள ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவரை இதை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதே போல சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டிற்கும் ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிகழ்ந்தது.
தளபதி விஜய் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் “மாஸ்டர்”. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்த படத்தில் இவருடன் மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். இந்தப்படத்தின் வெளியீட்டுக்காக அவரது ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.