‘குத்து, வாரணம் ஆயிரம்’ படங்களில் நடித்த திவ்யா ஸ்பந்தனாவுக்கு மாரடைப்பா?… தீயாய் பரவிய தகவலால் பரபரப்பு!

  • September 6, 2023 / 02:42 PM IST

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திவ்யா ஸ்பந்தனா. இவருக்கு அமைந்த முதல் தமிழ் படத்திலேயே பாப்புலர் ஹீரோக்களில் ஒருவரான சிலம்பரசன் TR தான் ஹீரோவாக நடித்திருந்தார். அந்த படம் தான் ‘குத்து’.

இதனை பிரபல இயக்குநர் ஏ.வெங்கடேஷ் இயக்கியிருந்தார். ‘குத்து’ படத்துக்கு பிறகு நடிகை திவ்யா ஸ்பந்தனாவுக்கு அடித்தது ஜாக்பாட். இவரின் கால்ஷீட் டைரியில் அர்ஜுனின் ‘கிரி’, தனுஷின் ‘பொல்லாதவன்’, ஷாமின் ‘தூண்டில்’, சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’ என படங்கள் குவிந்தது.

கடைசியாக திவ்யா நடித்த தமிழ் படமான ‘சிங்கம் புலி’ 2011-ஆம் ஆண்டு வெளியானது. இதில் ஜீவா டபுள் ஆக்ஷனில் வலம் வந்திருந்தார். திவ்யா ஸ்பந்தனா தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் கன்னடம், தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

இன்று நடிகை திவ்யா ஸ்பந்தனாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார் என சமூக வலைத்தளங்களில் தண்டோரா போடப்பட்டு வருகிறது. தற்போது, இது குறித்து நம்பத்தகுந்த வட்டாரங்களில் விசாரிக்கையில் “திவ்யா நலமுடன் இருக்கிறார். பரவி வரும் இந்த தகவல் உண்மையல்ல. வதந்தியே” என்று கூறியுள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus