உதவி இயக்குனராக பணிபுரிந்த பிரபல காமெடி நடிகர்!

  • August 18, 2020 / 05:35 PM IST

தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் சதீஷ். இவர் தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் 14 வருடங்களுக்கு முன் தான் உதவி இயக்குனராக இருந்த போது எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தனது நினைவுகளை பதிவு செய்துள்ளார்.

கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்த “ஜெர்ரி” என்ற திரைப்படத்தில் இயக்குனர் கந்தன் அவர்களுக்கு துணை இயக்குனராக நகைச்சுவை நடிகர் சதீஷ் பணிபுரிந்துள்ளார். இந்தப்படத்தில் ஜித்தன் ரமேஷ் ஹீரோவாக நடித்திருந்தார்.

இந்தப் படத்தில் துணை இயக்குனராக மட்டுமில்லாமல் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகியிருந்த சதீஷ் தான் தற்போது பிரபல நகைச்சுவை நடிகராக தமிழ் திரையுலகில் வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த புகைப்படத்தை வெளியிட்டு தனது பிளாஷ்பேக்கை நினைவு கூர்ந்துள்ளார்.

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியாகவிருக்கும் “அண்ணாத்த”, உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகவிருக்கும் “இந்தியன்2”, ஆர்யா மற்றும் சாயிஷா நடிப்பில் வெளியாகவிருக்கும் “டெடி” திரைப்படம் ஆகிய முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களில் இவர் நடித்து வருகிறார்.

கொரோனா லாக்டோன் முடிந்து திரைப்பட படப்பிடிப்புகள் தொடங்கியவுடன் இந்த படங்களில் இவர் நடிப்பார். சினிமா பிரபலங்கள் இந்த லாக்டோன் சமயத்தில் தங்களது பிளாஷ்பேக் புகைப்படங்களை வெளியிட்டு அதை பற்றி அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus