சென்னையில் நடன கலைஞர் தற்கொலை !

  • January 28, 2023 / 03:33 PM IST

டிக் டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் நடனமாடி வீடியோ பதிவிட்டு அதன் மூலம் பிரபலமானவர் நடன மாஸ்டர் ரமேஷ். இவர் ஜீ தமிழ் டிவியில் சில நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார் . திரைப்படங்களில் பணியாற்றும் வாய்ப்பு இவருக்கு கிடைத்து உள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் ரமேஷ் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்திலும் ரமேஷ் நடனமாடியுள்ளார் என்று கூறப்படுகிறது .

இப்படி இருக்கையில் ( 27.01.2023) அன்று தனது பிறந்தநாள் என்பதால் மது அருந்தி உள்ளார். மேலும் தனது பிளாட்டில் உள்ள குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்து அதையும் வெளியிட்டுள்ளார். இந்த சூழலில் தனது குடியிருப்பில் பத்தாவது மாடியில் இருந்து குதித்து ரமேஷ் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மேலும் அவருடைய தற்கொலைக்கான காரணம் என்ன என்பது தற்போது வரை தெரியவில்லை. இதுகுறித்து தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ரசிகர்களும் பிரபலங்களும் தற்போது இவரது இறப்பிற்கு வருத்தம் தெரிவித்து வருகின்றனர் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus