தமிழ் திரைப்படத்துறையில் தயாரிப்பாளர்களுக்கு நிதியில் அதிகமான அளவு உதவி செய்வது பைனான்ஸியர்கள் தான். பிறகு படத்தின் வெளியீட்டின் போது வாங்கிய பணத்தை தயாரிப்பாளர்கள் செட்டில் செய்துவிட்டு பின்பு படத்தை வெளியிடுவார்கள்.
இதனால் சில நேரங்களில் படத்தின் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்ட கதைகளும் உண்டு. இப்படி இயங்கும் திரைப்படத்துறையில், பிரபல பைனான்சியர் திருப்பூர் சுப்பிரமணியன் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறார்.
இவர் தற்போது தனது நெருங்கிய நண்பரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து தன் கருத்துகளை வெளியிட்டுள்ளார். இவர் கூறியுள்ளதாவது, தமிழ் சினிமாவில் முதல் முறையாக சம்பளமின்றி நடித்துக் கொடுத்த நடிகர் என்ற பெருமை ரஜினியை தான் சேரும் என்றும், தன்னுடன் நடிப்பவர்கள் மற்றும் படத்தின் லாப நஷ்டத்தில் தன் பங்கை வெளியிட்டு மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்வார் என்றும் ரஜினி பற்றி பெருமையாக பேசியுள்ளார்.
ஸ்ரீ கவிதாலயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் “வேலைக்காரன்” படத்தில் நடித்ததற்கு சம்பளம் வாங்கவில்லை என்றும், பாபா படம் எதிர்பார்த்த அளவு சரியாக ஓடாததால் அதற்கான நஷ்டத்தில் யார் பாதிக்கப்பட்டார்கள் என்று கேட்டு தேவையானவற்றை செய்து கொடுத்தாராம் ரஜினி.
இன்றைய காலகட்டத்தில் பெரிய நட்சத்திரங்கள் தங்களது சம்பளங்களை உயர்த்திக் கொண்டு போகும் நிலையில் ரஜினி தான் நடிப்பதற்கான தகுதி அறிந்ததான் சம்பளத்தை எப்போதும் கேட்பார் என்று ரஜினி குறித்து திருப்பூர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தற்போது ரஜினி நடிப்பில் “அண்ணாத்த” திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாகவும், இதில் வருகிற நவம்பர் மாதம் முதல் கீர்த்தி சுரேஷ் மற்றும் நயன்தாரா வருகிற காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாகவும், ஜனவரி மாதத்திற்கு மேல் ரஜினி படப்பிடிப்புக்கு வருவார் என்று செய்தி வந்துள்ளது.