தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் மகள் திருமண நிகழ்ச்சி … வைரலாகும் ஸ்டில்ஸ்!

  • November 23, 2022 / 01:46 PM IST

கோலிவுட் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம் வருபவர் டாக்டர் ஜி.தனஞ்ஜெயன். இவர் தயாரிப்பில் நடிகர் விஜய் ஆண்டனியின் கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன் மற்றும் காக்கி ஆகிய படங்களை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சரின் சார்பில் தயாரித்து வருகிறார். இவரின் மூத்த மகளான ரேவதியின் திருமணம் அபிஷேக் குமார் என்பவருடன் அம்பத்தூரில் உள்ள பிஎஸ்பி கன்வென்ஷஸ் ஹாலில் நடைபெற்றது.

இந்த திருமண நிகழ்ச்சியில் மூத்த நடிகர் சிவகுமார் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு திருமாங்கல்யத்தை மணமகன் அபிஷேக்கிடம் எடுத்து கொடுத்தார். மேலும் தயாரிப்பாளர்களான கலைப்புலி எஸ். தாணு, ‘சூப்பர் குட்’ ஆர்.பி. செளத்ரி, எடிட்டர் மோகன், ஜி. என். அன்புசெழியன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


இயக்குனர்கள் கே. பாக்யராஜ், கே.எஸ். ரவிக்குமார், ஆர். பார்த்திபன், பாலா, ராம், மிஷ்கின், சுந்தர்.சி, வசந்த் சாய், ‘சிறுத்தை’ சிவா, ஏ.எல். விஜய், எழில், சசி, சீனு ராமசாமி, மோகன் ராஜா, லக்ஷ்மி ராமகிருஷ்ணன், ராதாமோகன், விஜய் மில்டன், திரு, பாண்டிராஜ், என பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்நிலையில் இந்த திருமண நிகழ்ச்சியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது .

Read Today's Latest Gallery Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus