டோலிவுட்டில் மேலும் ஒரு சோகம்.. டோலிவுட்டில் மேலும் ஒரு சோகம்..

  • January 27, 2023 / 06:37 PM IST

தெலுங்கு திரை உலகிற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கிடைத்துள்ளது . இன்று காலை நட்சத்திர நாயகி ஜமுனா காலமானார் . உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் இறந்தார் . அந்த அதிர்ச்சியில் இருந்து இண்டஸ்ட்ரி மீள்வதற்குள் இன்னொரு சோகம் அரங்கேறி உள்ளது . பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சீனிவாச மூர்த்தி மரணமடைந்துள்ளார் . மாரடைப்பு காரணமாக சீனிவாச மூர்த்தி திடீரென மயங்கி விழுந்தார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். பல தமிழ் நட்சத்திர ஹீரோக்களை தெலுங்கில் டப்பிங் செய்துள்ளார் .

. நடிகர்கள் சூர்யா, அஜித், விக்ரம் மற்றும் மலையாள நட்சத்திரங்களான மோகன்லால், ஜெயராம் ஆகியோரையும் தெலுங்கில் டப்பிங் செய்துள்ளார் . . ஸ்டார் ஹீரோக்களின் உடல் மொழிக்கேற்ப டப்பிங் செய்வது இவரது சிறப்பு . இவ்வளவு பெரிய டப்பிங் கலைஞரை தற்போது தெலுங்கு திரையுலம் இழந்து உள்ளது .

ஆரம்பத்தில் இவருக்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை . பின்பு டோலிவுட்டில் நடிகர் சூர்யாவுக்கு அதிக மார்க்கெட் ஏற்பட்ட காரணத்தினால் தொடர்ந்து அவர் படங்களில் பணியாற்றும் வாய்ப்பை பெற்றவர் இவர் .

தற்போது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus