2022-ல் ரிலீஸ் : ‘பீஸ்ட்’ டு ‘சர்தார்’… ரசிகர்கள் எதிர்பார்க்கும் டாப் 10 படங்களின் லிஸ்ட்!

  • January 3, 2022 / 10:04 PM IST

ஒவ்வொரு ஆண்டும் முன்னணி ஹீரோக்கள் – முன்னணி இயக்குநர்கள் காம்போவில் பல படங்கள் வந்த வண்ணமிருக்கிறது. இந்த ஆண்டு (2022) ரிலீஸாவதற்காக சில படங்கள் முடிவடைந்து காத்திருக்கிறது, சில படங்களின் ஷூட்டிங் நடைபெற்று கொண்டிருக்கிறது. அப்படி இந்த ஆண்டு (2022) ரிலீஸாகப்போவதில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் டாப் 10 படங்களின் லிஸ்ட் இதோ…

1.பீஸ்ட் :

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’-ஐ நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைத்து வருகிறார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து வருகிறார். இதில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் இயக்குநர் செல்வராகவன் நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம். படத்தை வருகிற ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

2.வலிமை :

முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த படம் தான் ‘வலிமை’. இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம். ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி தான் இந்த படத்தில் ஹீரோயினாம். அஜித்துக்கு எதிரியாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளாராம். படத்தை வருகிற ஜனவரி 13-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

3.எதற்கும் துணிந்தவன் :

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்து வருகிறது. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் வினய்யும், மிக முக்கிய ரோலில் சத்யராஜும் நடித்துள்ளார்கள். இதற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். இதன் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. படத்தை வருகிற பிப்ரவரி 4-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

4.RRR :

‘பாகுபலி’யை தொடர்ந்து பிரம்மாண்ட படைப்பான ‘இரத்தம் ரணம் ரௌத்திரம்’ (RRR)-ஐ இயக்கியிருக்கிறார் டாப் இயக்குநர்களில் ஒருவரான எஸ்.எஸ்.ராஜமௌலி. இப்படத்தினை D.V.V. தானய்யா தனது ‘DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ மூலம் தயாரித்துள்ளாராம். இந்த திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன், ஒலிவியா மோரிஸ், அலியா பட், ரே ஸ்டீவன்சன், அலிசன் டூடி, ஸ்ரேயா சரண் நடித்துள்ளார்கள். தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டுள்ள இப்படத்தை முதலில் வருகிற ஜனவரி 7-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டிருந்தனர். பின், ரிலீஸை தள்ளி வைத்தனர். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

5.விக்ரம் :

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். இவரின் ‘விக்ரம்’ படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். பொலிட்டிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் படமான இதில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ‘கைதி’ அர்ஜுன் தாஸ் – நரேன், காளிதாஸ் ஜெயராம், ‘பிக் பாஸ் 4’ ஷிவானி நாராயணன் ஆகியோர் முக்கிய ரோல்களில் நடிக்கின்றனர். டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்துக்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. படத்தை வருகிற ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

6.பொன்னியின் செல்வன் :

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் மணிரத்னம். இப்போது மணிரத்னம் பிரம்மாண்ட படமான ‘பொன்னியின் செல்வன்’ஐ இயக்கி கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ‘ஜெயம்’ ரவி, கார்த்தி, த்ரிஷா, விக்ரம் பிரபு, ஜெயராம், பிரபு, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ரகுமான், கிஷோர், அஷ்வின், ரியாஸ் கான், லால் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து கொண்டிருக்கிறார். இந்த படத்தை அதிக பொருட்செலவில் ‘மெட்ராஸ் டாக்கீஸ் – லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்து கொண்டிருக்கிறது. இதன் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறதாம். இப்படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் ப்ளான் போட்டுள்ளனர். முதல் பாகம் வருகிற ஏப்ரல் மாதம் ரிலீஸாகுமாம்.

7.டான் :

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரின் ‘டான்’ படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கி வருகிறார். இந்த படத்தை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் தனது ‘சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், முக்கிய ரோல்களில் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, முனிஸ்காந்த், பால சரவணன், காளி வெங்கட், RJ விஜய், ஷிவாங்கி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. படத்தை வருகிற பிப்ரவரி மாதம் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

8.கே.ஜி.எஃப் 2 :

‘கே.ஜி.எஃப்’ படத்தின் பார்ட் 2-வை இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கி கொண்டிருக்கிறார். இந்த படத்தில் கதையின் நாயகனாக யாஷ் நடித்துள்ளாராம். மேலும், முக்கிய ரோல்களில் ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ் ஆகியோர் நடித்துள்ளார்களாம். ‘அதீரா’ என்ற பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் சஞ்சய் தத் நடித்துள்ளார். இதன் முதல் பாகம் சூப்பர் ஹிட்டானதால், ரசிகர்களுக்கு பார்ட் 2 மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. இப்படத்தை வருகிற ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி திரையரங்குகளில் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

9.கோப்ரா :

சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். ஒவ்வொரு படத்துக்கும் விக்ரம் தனது கெட்டப்பை மாற்றி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறார். விக்ரமின் நடிப்புக்கு சரியான தீனி போடும் வகையில் அமைந்துள்ள படம் ‘கோப்ரா’. இந்த படத்தை ‘டிமான்ட்டி காலனி’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்க, ஹீரோயினாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். மேலும், மிக முக்கிய ரோலில் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்துக்கு இன்னொரு ஹைலைட்டாக அமைந்திருப்பது ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மானின் இசை. இதன் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த ஆண்டு (2022) இப்படத்தை ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

10.சர்தார் :

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரின் ‘சர்தார்’ படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பி.எஸ்.மித்ரன் இயக்கி வருகிறார். கார்த்தி டபுள் ஆக்ஷனில் நடிக்கும் இந்த படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் என டபுள் ஹீரோயின்ஸாம். மேலும், முக்கிய ரோல்களில் சிம்ரன், சங்கி பாண்டே, முரளி ஷர்மா, இளவரசு, முனிஷ்காந்த் ஆகியோர் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்தார். இந்த ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை வருகிற ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus