பூ மழையில் நனைந்த அல்லு அர்ஜுன்

  • January 21, 2023 / 03:19 PM IST

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான படம் புஷ்பா . இந்த படத்தை இயக்கி இருந்தவர் இயக்குனர் சுகுமார் . நடிகை ராஷ்மிகா இந்த படத்தில் நாயகியாக நடித்து இருந்தார் . தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது . மேலும் படம் ஹிந்தி , தமிழ் . தெலுங்கு என வெளியான அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது .

புஷ்பா படத்தின் முதல் பாகத்தை 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுத்தார்கள். இரண்டாம் பாகத்தை 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்க திட்டமிட்டு இருக்கிறார்கள் . புஷ்பா படத்தின் முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகத்தின் வசூல் அதிகமாக இருக்க வேண்டும் என்பதுதான் அதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது .

இந்நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டிணத்தில் தொடங்கி உள்ளது . இதில் கலந்துக்கொண்ட அல்லு அர்ஜுனுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது . தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus