“அந்த ரோலில் நடிச்சதுக்காக ரசிகர்கள் செருப்பை கழட்டி என் மீது வீசினார்கள்”… உருக்கமாக பேசிய ரம்யா கிருஷ்ணன்!
November 15, 2021 / 06:02 PM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ரம்யா கிருஷ்ணன். இவருக்கு தமிழில் அமைந்த முதல் படம் ‘வெள்ளை மனசு’. இதில் ஹீரோவாக YG.மகேந்திரன் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குநர் சித்ராலயா கோபு இயக்கியிருந்தார். இப்படத்திற்கு பிறகு நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘படிக்காதவன், பார்த்த ஞாபகம் இல்லையோ, சர்வம் சக்திமயம், பேர் சொல்லும் பிள்ளை, தம்பி தங்ககம்பி, நல்ல காலம் பொறந்தாச்சு, சிகரம், கேப்டன் பிரபாகரன், வானமே எல்லை, படையப்பா, பாட்டாளி, ராஜகாளி அம்மன், பட்ஜெட் பத்மநாபன், அசத்தல், பஞ்சதந்திரம், ஜூலி கணபதி, பாறை, ஆம்பள, பாகுபலி 1 & 2, தானா சேர்ந்த கூட்டம், வந்தா ராஜாவாதான் வருவேன், தேவ், சூப்பர் டீலக்ஸ்’ என தமிழ் படங்கள் குவிந்தது.
நடிகை ரம்யா கிருஷ்ணன் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். 2003-ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு இயக்குநர் கிருஷ்ண வம்சியை திருமணம் செய்து கொண்டார் ரம்யா கிருஷ்ணன். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இப்போது, ரம்யா கிருஷ்ணனின் நடிப்பில் தமிழில் ‘பார்ட்டி’, தெலுங்கில் ‘லைகர்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இந்நிலையில், ரம்யா கிருஷ்ணன் மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் “என் கேரியரில் மிக முக்கியமான படம் ‘படையப்பா’. அதில் என்னை வில்லி ‘நீலாம்பரி’ ரோலில் நடிக்க அணுகியபோது, ஹீரோயின் ரோல் கிடைத்திருந்தால் சூப்பராக நடித்திருக்கலாமே என்று நினைத்தேன். ஆனாலும், ரஜினி பட வாய்ப்பு என்பதால் விருப்பம் இல்லாமல் அதில் நடித்தேன்.
அப்படத்தின் ரிலீஸன்று எனது தங்கை திரையரங்கில் சென்று பார்க்கையில், ஸ்க்ரீனில் ரஜினிக்கு வில்லியாக என்னை பார்த்ததும் ரசிகர்கள் செருப்பை கழட்டி ஸ்க்ரீன் முன்பு வீசியிருக்கிறார்கள். அதை பார்த்துவிட்டு என் தங்கை என்னிடம் சொன்னதும், நான் என் கேரியர் அவ்வளவுதான் என்று நினைத்தேன். பின், அடுத்த ஒரு வாரத்தில் அந்த கேரக்டரில் நடித்ததுக்காக எனக்கு ரசிகர்கள் மத்தியிலும், திரையுலக பிரபலங்கள் மத்தியிலும் பாராட்டு மழை பொழிந்தது” என்று கூறியுள்ளார்.