பீஸ்ட் படத்தால் மோதிக்கொள்ளும் ரசிகர்கள் !

நடிகர் விஜய் மற்றும் நடிகர் அஜித் இருவரும் கோலிவுட்டில் முன்னணி நடிகர்களாக இருந்து வருகிறார்கள் . இரண்டு பேருக்குமே மிக பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது . இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சண்டை போட்டுக்கொள்ளுவதை வழக்கமாக கொண்டுள்ளனர் .

இரண்டு நடிகர்களின் படம் திரைக்கு வரும் பொழுது எல்லாம் மாரி மாரி படத்தை கலாய்த்து கொள்வார்கள் . அந்த வகையில் இன்று நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியாகிய படம் பீஸ்ட் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் . உலகம் முழுவதும் வெளியாகிய இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது .

பீஸ்ட் படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்று விஜய் ரசிகர்களே புலம்பிக்கொண்டு இருக்கும் தருணத்தில் அஜித் ரசிகர்கள் ட்வீட்டரில் விஜய் ரசிகர்களை கலாய்த்து வருகின்றனர் . விஜய் ரசிகர்களும் வலிமை படத்தை பற்றி திரும்ப கலாய்க்க பீஸ்ட் படத்தை பற்றின பல மீம்ஸ்கள் சமூகத்தில் வெளியாகி கொண்டு இருக்கின்றனர் .

இதே மாதிரியான நிலைமை தான் அஜித் நடித்த வலிமை படம் வெளியான பொழுது இருந்தது . இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் நெகட்டிவிட்டியை மாரி மாரி பரப்பி வருகிறார்கள் என்று பலர் கருதுகின்றனர் . இதற்கு முடிவே இல்லையா என்று வடிவேலு பாணியில் புலம்பிக்கொண்டு இருக்கிறார்கள் .

Share.