சூர்யாவுக்கு பிடித்த உணவு எது தெரியுமா ?

டிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் பாண்டியராஜ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா ,இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ள வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட் சென்னையில் நடந்தது. வெற்றிமாறன் சூரி நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார்.அந்த படம் வெளியான பின் வாடிவாசல் படம் முழுவதுமாக தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் சூர்யா தற்பொழுது இயக்குனர் பாலா இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்து முடிந்தது . படத்திற்கு வணங்கான் என்று தலைப்பு வைத்துள்ளனர் .இந்த படத்தில் நடிகர் சூர்யா இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்றும் ஒரு வேடத்தில் காது கேளாத மற்றும் வாய் பேசாத நபராக நடிக்கிறார் என்ற செய்திகளும் வெளியாகி இருந்தது .

பாலா மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகும் வணங்கான் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதத்திற்கு தள்ளிப்போக உள்ளது . இதனால் சூர்யா மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு இந்த தொடங்குகிறது .

நடிகர் சூர்யா தனது உடல் மீது நன்கு அக்கறை உடையவர் . உணவே மருந்து என்பார்கள் அந்த வகையில் உணவு பழக்கத்தில் மிகவும் கவனத்தோடு இருப்பவர் . அந்த வகையில் இவர் அதிகம் விரும்பி உண்ணும் உணவாக தயிர் சாதம் இருக்கிறது .

Share.