கர்ணம் மல்லேஸ்வரி பட இயக்குனர் மருத்துவமனையில் அனுமதி..!
June 9, 2020 / 09:21 PM IST
|Follow Us
தெலுங்கு இயக்குனர் சஞ்சனா செட்டி ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல்நலம் சரியில்லாமல் சேர்க்கப்பட்டார் . இவர் ICU பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், செயற்கை சுவாசக் கருவி மூலம் சுவாசிக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இயக்குனர் சஞ்சனா ரெட்டி “ராஜூ காடு ” என்ற படத்தில் நடிகர். ராஜ் தருணுடன் தனது திரையுலக பயணத்தை தொடங்கினார். இவர் அடுத்து, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிரபல வெயிட் லிப்டிங் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி யின் கதையை இயக்கவிருந்தார்.
ஒலிம்பிக் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரியின் கதையை திரைக்கதை ஆக்கி அதற்கு உரிமம் பெற்றவர் கோனா வெங்கட். இந்தப் படம் தமிழ் ,தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாக்கப்படவுள்ளது. இந்தத் திரைப்படம் எம்பிவி சத்யநாராயணன் தயாரிப்பில் சஞ்சனா ரெட்டி இயக்கத்தில் உருவாகவிருந்தது.
இந்நிலையில் சஞ்சனா ரெட்டி உடல்நலம் சரியில்லாததை அடுத்து கோனா வெங்கட் கூறியதாவது ” சஞ்சனா ரெட்டி தற்போது நல்ல உடல் நிலையில் உள்ளார், மேலும் இந்த கதையை அவர் இயக்குவார்” என்று கூறியுள்ளார்.அவர் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி பிறந்தநாளையொட்டி இந்த படத்தின் செய்தி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இன்னும் இந்த படத்தின் கதாநாயகி யார் என்பது உறுதிசெய்யப்படவில்லை.