தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்த மறைந்த கே.பாலச்சந்தர் குடும்பத்திற்கு தற்போது பைனான்சியர் திருப்பூர் சுப்ரமணியம் பேருதவியை செய்துள்ளார்.
தமிழ் திரைப்படத்துறையில் தயாரிப்பாளர்களுக்கு நிதியில் அதிகமான அளவு உதவி செய்வது பைனான்ஸியர்கள் தான். பிறகு படத்தின் வெளியீட்டின் போது வாங்கிய பணத்தை தயாரிப்பாளர்கள் செட்டில் செய்துவிட்டு பின்பு படத்தை வெளியிடுவார்கள்.
இதனால் சில நேரங்களில் படத்தின் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்ட கதைகளும் உண்டு. இப்படி இயங்கும் திரைப்படத்துறையில், பிரபல பைனான்சியர் திருப்பூர் சுப்பிரமணியம் இயக்குநர் கே.பாலச்சந்தர் மற்றும் ஆர்பி சவுத்ரி இணைந்து உருவாக்கவிருந்த சத்யராஜ் நடிப்பில் வெளியாகவிருந்த திரைப்படத்திற்கு சுமார் ஒன்றரை கோடி ரூபாய் கொடுத்திருந்தாராம்.
இயக்குனர் கே.பாலச்சந்தர் 1.5 லட்சம் ரூபாயை மட்டுமே கொடுத்திருந்த நிலையில் திடீரென்று மரணமடைந்தார். இதன்பிறகு திருப்பூர் சுப்பிரமணியம் அவருக்கு கொடுத்திருந்த கடனை முழுவதுமாக தள்ளுபடி செய்து கே.பாலச்சந்தர் கையொப்பமிட்ட டாகுமெண்ட்ஸ் அனைத்தையும் கே.பாலச்சந்தரின் மகள் புஷ்பா கந்தசாமிக்கு திருப்பி அனுப்பி வைத்து விட்டாராம்.
இதற்கு படத்தைத் தயாரித்து திருப்பிக் கொடுத்து விடுவேன் என்று கூறிய புஷ்பா கந்தசாமியிடம், கே.பாலசந்தர் அவர்களின் படங்களால் நான் நிறைய சம்பாதித்திருக்கிறேன். அதனால் இதை செய்ய வேண்டியது என் கடமை என்று கூறியுள்ளாராம்.
இதன் மூலம் கே.பாலச்சந்தர் மீது திருப்பூர் சுப்ரமணியம் கொண்டுள்ள மரியாதை குறித்தும், திருப்பூர் சுப்ரமணியம் அவர்களின் நல்மனதும் வெளிப்பட்டுள்ளது.