‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது, திரையரங்குகளும் மூடப்பட்டது. சமீபத்தில், சில நிபந்தனைகளுடன் திரையரங்குகளை திறக்கவும், ஷூட்டிங் எடுக்கவும் அரசாங்கம் அனுமதி கொடுத்து விட்டது. இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம் தொடர்பான ஒரு செய்தி கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் இன்று (டிசம்பர் 7-ஆம் தேதி) திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கென இருக்கும் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “நடிகர் சங்க அலுவலகத்தில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
சுமார் 3 மணி நேரம் போராடி அணைக்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்து தொடர்பாக விசாரித்து வரும் காவல் துறையினர் “மின் கசிவால் தான் இவ்விபத்து ஏற்பட்டிருக்கிறது” என்று கூறியுள்ளனர். மேலும், இந்த அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சில முக்கிய ஆவணங்கள் எரிந்து விட்டதாக சொல்லப்படுகிறது.
#Breaking | நடிகர் சங்க அலுவலகத்தில் அதிகாலை 4.30 மணியளவில் தீ விபத்து. சுமார் 3மணி நேரம் போராடி இப்பொழுது அணைக்கப்பட்டது. #SIAA #NadigarSangam pic.twitter.com/IsmXIoL2Op
— NadigarSangam PrNews (@NadigarsangamP) December 7, 2020
A Fire accident happened at #NadigarSangam today morning at 4:30. We hear that it started from kitchen area and it came to an end after 3 hours of continuous struggle. There is no news about the loss till now. #SiAA pic.twitter.com/xOww92Gjsi
— Johnson PRO (@johnsoncinepro) December 7, 2020