FEFSIக்கு உதவிய முதல் பிறமொழி நடிகை..!

  • April 22, 2020 / 10:32 AM IST

பிறமொழி நடிகையான கங்கனா FEFSI தொழிலாளர்களுக்கு என 5 லட்சம் ரூபாயும், தலைவி படக்குழுவினருக்கு என 5 லட்சமும் நிதியுதவி செய்துள்ளார்.

தாம் தூம் படத்தில் அறிமுகமான கங்கனா, அதன்பின் இந்தியில் பிரபலமான ஹீரோயின் ஆனார். தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை கூறும் தலைவி என்ற படத்தில் நடித்து வரும் அவர் அதற்காக தீவிரமாக உழைத்து வருகிறார்.

ஜெயலலிதாவை தத்ரூபமாக திரையில் காட்ட வேண்டும் என உடல் எடையைும் அதற்கேற்ப ஏற்றி வருகிறார். பேஷன் என்ற படத்தில் மெலிந்த உருவத்தோடு இருந்த கங்கனா, இந்த படத்திற்காக பெருமளவு எடையை கூட்டி வருகிறார். இந்நிலையில் கோவிட் 19 வைரசால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தினசரி உழைக்கும் தொழிலாளிகளின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகியுள்ளது.

இந்நிலையில், நயன்தாரா,காஜல் அகர்வால், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் சமீபத்தில் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு நிதியுதவி அளித்த நிலையில் தற்போது கங்கனா ரனாவத் ஃபெப்சிக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதியும், ‘தலைவி’ படத்தில் வேலை செய்யும் தினசரி கூலித் தொழிலாளர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதியும் வழங்கியுள்ளார்.

FEFSI அமைப்பிற்கு நிதி வழங்கிய முதல் இந்தி நடிகை கங்கனா என்பது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus