மூத்த கிராமிய பாடகிக்கு நேர்ந்த சோகம்!

  • June 29, 2020 / 02:28 PM IST

“ஆண்பாவம்” படத்தின் மூலம் திரையுலகிற்கு நடிகராக அறிமுகப்படுத்தப்பட்டவர் கொல்லங்குடி கருப்பாயி. இவர் சமீபத்தில் சாலையை கடக்கும் போது விபத்துக்குள்ளானார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

ஆயுசு நூறு, ஏட்டிக்குப் போட்டி, கோபாலா கோபாலா ஆகிய படங்களிலும் இவர் நடித்துள்ளார். தற்போது 80 வயதான இவர் பல்வேறு கிராமிய பாடல்களைப் பாடியுள்ளார்.

1993-ஆம் வருடம் “கலைமாமணி” விருது பெற்ற இவர், சமீபத்தில் வறுமையால் வாடி வந்துள்ளார் என்பது சோகமான விஷயம். ஓய்வுபெற்ற நடிகர்களுக்கு அரசு தரும் ஓய்வூதியமான ரூ.1500 கொண்டுதான் வாழ்க்கை நடத்தி வந்தாராம்.

இவர் நேற்று சாலையைக் கடக்கும் பொழுது இருசக்கர வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். காரைக்குடியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இவர் காலில் பலத்த அடியுடன் உயிர் தப்பியுள்ளார்.தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவர் 30 வருடங்களாக ஆல் இந்தியா ரேடியோவில் பணியாற்றி வந்ததாகவும், தன் கணவர் இறந்த பின் பாடுவதை நிறுத்தி விட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus