‘மாஸ்டர்’ பட பாடல்… புரோமோஷனுக்காக பயன்படுத்திய கால்பந்து அணி!

  • August 6, 2020 / 10:47 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பிகில்’ கடந்த ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டானது. இவர் நடித்திருக்கும் புதிய படமான ‘மாஸ்டர்’ ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது.

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளாராம். இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். ‘கொரோனா’ பிரச்சனையால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இப்பிரச்சனை முடிந்தவுடன் ரிலீஸ் தேதியை ஃபிக்ஸ் செய்து கொள்ளலாம் என காத்துக்கொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

இந்நிலையில், சர்வதேச கால்பந்து விளையாட்டு அணியான ‘டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்’ தங்களது ட்விட்டர் பக்கத்தில் புதிய சீசனுக்கான புரோமோஷன் ட்வீடடில் ‘வாத்தி கம்மிங்’ என்று கேப்ஷன் கொடுத்துள்ளனர். ‘மாஸ்டர்’ படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் ‘வாத்தி கம்மிங்’ என்பது குறிப்பிடத்தக்கது. கானா பாலச்சந்தர் எழுதி, அனிருத் இசையமைத்துள்ள இந்த பாடலை இவர்கள் இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.

https://twitter.com/Spurs_India/status/1291029966365360128

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus