கொரோனா நாடு முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், சினிமா படப்பிடிப்புகள் முற்றிலுமாக முடங்கியுள்ளது. திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இதனால் டிஜிட்டலில் நிறைய படங்கள் வெளியாகி வருகிறது.
தற்போது நெட்பிலிக்ஸ் என்னும் ஓடிடி தளத்தில் கோலிவுட்டின் நான்கு முக்கிய இயக்குனர்கள் சேர்ந்து ஒரு வெப்சீரிஸை இயக்கி வருகிறார்கள். ஒவ்வொரு இயக்குனரும் தனித்தனியாக 30 நிமிட நேரமுள்ள ஒரு குறும் படத்தை இயக்கி ஒன்றாக ஒரு வெப்சீரிஸை வெளியிடவுள்ளார்கள்.
வெற்றிமாறன், கௌதம் வாசுதேவ் மேனன், சுதா கொங்கரா மற்றும் விக்னேஷ் சிவன் தான் அந்த நான்கு முக்கிய இயக்குனர்கள்.இதில் அனைத்து குறும்படங்களுமே ஆணவக்கொலை பற்றியதுதான்!
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் குறும்படத்தில் பிரகாஷ்ராஜ் மற்றும் சாய்பல்லவி நடித்துள்ளார்கள். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஸ்வின் நடித்துள்ளார், இதற்கு தர்புக சிவா இசையமைத்துள்ளார்.இது மதுரையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
சாந்தனு பாக்யராஜ், காளிதாஸ், பவானிஸ்ரீ ஆகியோர் சுதா கொங்கரா இயக்கும் பகுதியில் நடித்துள்ளார்கள். விக்னேஷ்சிவன் தான் இயக்கும் பகுதியில் சென்னையை சுற்றியுள்ள இடங்களை படம்பிடித்துள்ளார். இந்தப்பகுதியில் அஞ்சலி மற்றும் கல்கி நடித்துள்ளார்கள்.
இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முழுவதுமாக முடிந்த நிலையில் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறதாம். இந்த வெப்சீரிஸ் பற்றிய அதிகாரபூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என்று தற்போது செய்தி வந்துள்ளது.