ஒரே காமெடி தான் போங்க !

  • January 12, 2023 / 01:12 PM IST

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இதுவரை 5 சீசன் நடந்து முடிந்துள்ளது . இந்நிலையில் பிக்பாஸ் 6-வது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்நிலையில் 90 நாள் கடந்து போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . கடந்த வாரம் இந்த போட்டியின் உச்சக்கட்டமான டிக்கெட் டு பைனல் டாஸ்க் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது . இந்நிலையில் டிக்கெட் டு பைனல் போட்டியில் நடந்த அனைத்து டாஸ்கிலும் அதிக புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பெற்ற அமுதவாணன் நேரடியாக பிக் பாஸ் 6 இறுதிப் போட்டிக்கு தகுதி ஆகி அசத்தி உள்ளார்.

இந்நிலையில் போட்டியாளர் ரட்சித்தா வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் . இந்நிலையில் இன்று வெளியாகி இருந்த முதல் ப்ரோமோவில் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களான அசல் மற்றும் ராபர்ட் மாஸ்டர் வந்துள்ளனர் . உள்ளே வந்த அசல் எ.டி.கே இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது .

இது ஒரு பக்கம் இருக்க இன்று வெளியாகி இருந்த இரண்டாவது ப்ரோமோவில் ஜி .பி முத்து மீண்டும் வீட்டுக்குள் நுழைந்து உள்ளார் . இதனால் தற்போது வீடு கலகலவென்று உள்ளது . ஜி .பி . முத்துவை மீண்டும் பிக் பாஸ் வீட்டில் பார்க்க பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர் .

Read Today's Latest Ott Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus