அசுரன் 2019 ஆம் ஆண்டு வெளியான சூப்பர்ஹிட் திரைப்படமாகும் .இந்த படத்தை வெற்றிமாறன் எழுதி இயக்கி இருந்தார் . மேலும் கலைப்புலி எஸ். தாணு தயாரித்து இருந்தார் .இந்தப் படம் பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டது. இப்படத்தில் தனுஷ் மற்றும் மஞ்சு வாரியர் நடித்து இருந்தனர் . . ஜி.வி. பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைத்தார்.ஒளிப்பதிவை வேல்ராஜ் கையாண்டுள்ளார், படத்தொகுப்பை ஆர்.ராமர் செய்துள்ளார்.
அசுரன் படம் 4 அக்டோபர் 2019 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இப்படம் வணிக ரீதியாக பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. 67வது தேசிய திரைப்பட விருதுகளில் 2021 ஆம் ஆண்டில் தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது. 78வது கோல்டன் குளோப் விருதுகளில் (2021) சிறந்த வெளிநாட்டுத் திரைப்படப் பிரிவின் கீழ் திரையிடப்பட்ட பத்து இந்தியத் திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். மேலும் கோவாவில் நடைபெற்ற 51வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது, 2020 ஆம் ஆண்டுக்கான இந்திய பனோரமா பிரிவின் கீழ் திரைப்படங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
அசுரன் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாய் படத்தின் பின்னணி இசை அமைந்து இருந்தது . இந்த படத்திற்கு இசையமைக்க இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் 75 லட்சம் சம்பளமாக பெற்று இருக்கிறார் .