‘கட்டா குஸ்தி’-க்காக ஜிம்மில் வொர்க் அவுட் செய்த ஐஸ்வர்யா லக்ஷ்மி… வைரலாகும் வீடியோ!

  • December 9, 2022 / 12:42 AM IST

மலையாள சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா லக்ஷ்மி. இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே விஷாலுடன் தான். அது தான் ‘ஆக்ஷன்’. இந்த படத்துக்கு பிறகு நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மிக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஜகமே தந்திரம், புத்தம் புது காலை விடியாதா, கார்கி, கேப்டன், பொன்னியின் செல்வன் முதல் பாகம், அம்மு’ என தமிழ் படங்கள் இணைந்தது.

சமீபத்தில் இவர் நடித்திருக்கும் புதிய படமான ‘கட்டா குஸ்தி’ திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடிக்க, இதனை இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கியிருந்தார். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘கட்டா குஸ்தி’ படத்துக்காக ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் போது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். இவ்வீடியோ ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Read Today's Latest Videos Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus