தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கௌதம் வாசுதேவ் மேனன் தற்போது “சிறு வயதிலேயே நான் பெரிய பையன்” என்ற கேப்ஷனுடன் தனது சிறுவயது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கௌதம் வாசுதேவ் மேனன் இந்த புகைப்படத்தில் தனது தந்தை, தாய் மற்றும் இரண்டு சகோதரிகளுடன் இருக்கிறார். இந்த புகைப்படத்தில் இருக்கும் கௌதம் வாசுதேவ் மேனனின் தந்தை போல்தான் “வாரணம் ஆயிரம்” படத்தில் சூர்யாவின் தந்தை கதாபாத்திரத்தை கௌதம் வாசுதேவ் மேனன் உருவாகியுள்ளதாகவும், இந்த புகைப்படம் வெளியான பின் ரசிகர்களிடையே கருத்து நிலவி வருகிறது.
2001 ஆம் ஆண்டு வெளியான “மின்னலே” திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் கௌதம் வாசுதேவ் மேனன். இதை தொடர்ந்து காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்.
தற்போது இவர் விக்ரம் நடிப்பில் “துருவ நட்சத்திரம்” படத்தையும், “ஜோஷ்வா இமைபோல் காக்க” படத்தையும் இயக்கிவருகிறார்.
சமீபத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் சீக்குவலான “கார்த்திக் டயல் செய்த எண்” என்ற குறும்படத்தை தயாரித்து இயக்கி வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள சிறுவயது புகைப்படம் அவரது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.